நாளை இளம் விஞ்ஞானிகள் மாநாடு :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் நாளை (டிச.12) இளம் விஞ்ஞானிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் எஸ்.சுரேஷ் பாண்டி வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசின் சார்பில் ஆண்டு தோறும் இளம் படைப்பாற்றல் மிக்க அறிவியல் செயல்பாட்டுக்கான இளம் விஞ்ஞானிகளை தேர்வு செய்யும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2021-ம் ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் டிசம்பர் 12-ம் தேதி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெறுகிறது. இதில் மாவட்டம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 300 இளம் மாணவ விஞ்ஞானிகள் கலந்து கொண்டு 220-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்துகின்றனர். 30-க்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளர்கள் பங்கேற்று அறிவியல் படைப்புகளை மதிப்பீடு செய்கின்றனர்.

மாநாட்டில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அறிவியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாவட்ட அளவில் சிறந்த இளம் விஞ்ஞானிகளின் அறிவியல் படைப்புகள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் தேர்வு செய்திட பரிந்துரைக்கப்படும்.

இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய 9952888663, 9789400015, 9442133362, 8056784473, 9384362399 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்