ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த - ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி :

By செய்திப்பிரிவு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவில்பட்டி முன்னாள் ராணுவத்தினர் நல உதவி மையம் சார்பில்பழைய பேருந்து நிலையம் முன்புநடைபெற்ற வீரவணக்க நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கலந்துகொண்டு உயிரிழந்த ராணுவத்தினரின் உருவப் படங்களுக்கு மெழுகுவத்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.

கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன், கோவில்பட்டி முன்னாள் ராணுவத்தினர் நல உதவி மையத்தின் தலைவர் கேசவன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, எஸ்ஐ அரிகண்ணன் உட்பட காவல்துறையினர் மற்றும் பழைய பேருந்து நிலைய கார்ஓட்டுநர் சங்க தலைவர் செல்லையா, துணைத்தலைவர் விஜயகுமார், கார் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி இனாம்மணி யாச்சி விலக்கு அருகே முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உருவப்படங்களுக்கு கடம்பூர் ராஜு எம்எல்ஏ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில், முன்னாள் ராணுவ வீரர்கள் மாரிச்சாமி, கனகராஜ், ராமசாமி, பாலமுருகன், கண்ணன், ரெங்கசாமி மற்றும் அதிமுக வடக்குமாவட்ட மாணவரணி துணைத் தலைவர் செல்வகுமார், மாவட்ட மகளிரணி இணை செயலர் சுதா என்ற சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுபோல் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காமரராஜ் சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் ஆ.க.வேணுகோபால் தலைமை வகித்தார். சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ.எஸ்.ஜோசப், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சங்கர், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பங்கேற்றனர்.

இதுபோல் தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம் உள்ளிட்ட இடங்களிலும் பாஜக மற்றும்பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்