திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும்மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021-2022-ம்கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பிளஸ் 1 வகுப்பு முதல்ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி,பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்கிறவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்கிறவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவ, மாணவிகள் அனைவரும் http://www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க வரும் 15-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து கூடுதல்விவரங்களை ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக எண் 0421- 2999130 மற்றும் dbcwotpr@gmail.com மின்னஞ்சல்முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago