லாரி ஓட்டுநர் அடித்துக் கொலை :

By செய்திப்பிரிவு

வெள்ளகோவில் அருகே லாரிஓட்டுநர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த சொரியங்கிணத்துப்பாளையம் - மடாமேடு சாலையிலுள்ள ஆதரவற்றோர் இல்லம் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாகபொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வெள்ளகோவில் கிராம நிர்வாக அலுவலர் சென்று பார்த்தபோது, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்பது தெரியவந்தது.

வாகன ஓட்டுநர் அணியும் காக்கிச் சட்டை அணிந்திருந்த நிலையில், உடலின் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. இதுதொடர்பாக வெள்ளகோவில் காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.ரமாதேவிக்கு புகார் அளிக்கப்பட்டது.

இறந்து கிடந்தவர் யார், எந்த ஊர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. ஒரு சில தகவலின் அடிப்படையில் போலீஸார் நேற்று விசாரணையை தொடங்கி, அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரும்பு கம்பியுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் பெயர் பாண்டியன் (36) என்பதும், கரூர் மாவட்டம் தென்னிலை அருகே கோடந்துரில்செயல்படும் கல்குவாரியில் கல்வெட்டும் இயந்திரம் இயக்குபவராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. முன்னுக்குப் பின் முரணாக அவர் பேச, போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர்.

இதில், இறந்து கிடந்தவர் சத்யநாராயணன் (36) என்பதும், கரூர் மவட்டம் தென்னிலை கோடந்துர் கல்குவாரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. பாண்டியனின் மனைவி லலிதா (எ) நாகம்மாளுடன் ஏற்பட்ட பழக்கம் தொடர்பாக சத்தியநாராயணனை எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக கல்குவாரியில் எழுந்த வாக்குவாதத்தின்போது, கல் மற்றும் கம்பியால் பாண்டியன் தாக்கியதில், படுகாயமடைந்து சத்தியநாராயணன் மயக்கமடைந்தார்.

இதையடுத்து தனது இருசக்கர வாகனத்தில் சத்தியநாராயணனை முதுகின் பின்புறம் சாய வைத்து பாண்டியன் அழைத்து வந்ததும், வெள்ளகோவில் சொரியங்கிணத்துப்பாளையம் - மடாமேடு சாலையிலுள்ள ஆதரவற்றோர் இல்லம் அருகே காட்டுப்பகுதியில் சத்தியநாராயணன் கீழே விழுந்துவிட, அங்கிருந்து பாண்டியன் இருசக்கர வாகனத்தில் மாயமானதும் தெரியவந்தது.இந்நிலையில், சோதனைச்சாவடியில் பாண்டியனை பிடித்து, கொலை வழக்கு பதிந்து வெள்ளகோவில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்