புகையிலைப் பொருட்களை விற்ற 4 கடைக்காரர்கள் கைது :

By செய்திப்பிரிவு

சேலம் மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான போலீஸார் பெருமா கவுண்டம்பட்டி, இளம்பிள்ளை, இடங்கணசாலை, மோட்டூர் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் ஜகுபர் அலி (50), இளம்பிள்ளை சவுண்டம்மன் கோயில் யாசர் அராவத் (28), இளம்பிள்ளை புதுரோடு பகுதியில் குமார் (35), மோட்டூரில் சீனிவாசன் (42) ஆகியோர் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்ததை கண்டு பிடித்தனர். 4 பேரையும் கைது செய்த போலீஸார், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட் களை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்