சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரியார் பல்கலைக் கழகத் தரவரிசையில் இடம்பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் காதர்நவாஷ் வாழ்த்துரை வழங்கினார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த 20-வது பட்டமளிப்பு விழாவில், 2018-2021-ம் கல்வி ஆண்டில் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையைச் சேர்ந்த சிவானி, உயிர்தொழில் நுட்பவியல் துறையச் சேர்ந்த கிரேஸ்ஹெலனா தங்கப்பதக்கமும், உயிர்தொழில் நுட்பவியல் துறையைச் சேர்ந்த கேத்தி ஜெமீமா 2-வது ரேங்க், அதே துறையைச் சேர்ந்த வைஷ்ணவி உத்தம் பவார், கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த கோகுலபிரியா ஆகியோர் 3-வது ரேங்க் பெற்றனர்.வணிகவியல் துறையைச் சேர்ந்த கீர்த்தனா 5-வது ரேங்க், உயிர்த்தொழில் நுட்பவியல் துறையைச் சேர்ந்த தேவதர்ஷினி, கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த யுவ 8-வது ரேங்க், வணிகவியல் துறையைச் சேர்ந்த சீ.ஜனனி 9-வது ரேங்க், உயிர்தொழில் நுட்பவியல் துறையைச் சேர்ந்த தி.ஜனனி 10-வது ரேங்க் பெற்றனர். பதக்கம் மற்றும் பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கி பாராட்டினர்.
விழாவில் சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் வீ.கார்த்திகேயன், எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், மதன்குமார், கவிதா மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago