விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரோவில் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்ட நிலையில், அங்கு ‘கிரவுன்’ எனப்படும் திட்டத்திற்கான சாலை அமைப்பதற்காக அங்குள்ள மரங்களை வெட்டும் பணியை பன்னாட்டு நகர வளர்ச்சிக்குழு மேற்கொண்டிருக்கிறது.
ஆரோவில் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள மரங்களை நகர வளர்ச்சிக் குழு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு அகற்றி வருகிறது. இதற்கு அப்பகுதி குடியிருப்பு வாசிகளின் ஒருபிரிவினர் எதிர்ப்பும், மற்றொரு பிரிவினர் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், நேற்று வெளிநாட்டினர் சிலர் ‘கிரவுன்’ திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மரம் வெட்டும் பகுதியில் அமர்ந்து அன்னையின் துதிப்பாடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனிடையே ஆரோவில்லில் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருபவர்களுக்கும், மரங்களை வெட்டும் பணியாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பதற்றமான சூழல் அப்பகுதியில் நிலவியது.
விழுப்புரம் மாவட்ட போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago