திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்களை அந்தந்த ஆட்சியர்கள் நேற்று வெளியிட்டனர். அதன்படி 7 மாவட்டங்களிலும் 23.86 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளில் 7,74,415 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சிகளில், துறையூரில் 27,881, துவாக்குடியில் 28,870, மணப்பாறையில் 34,683 வாக்காளர்கள் உள்ளனர்.
பேரூராட்சி வாரியாக பாலகிருஷ்ணம்பட்டியில் 7,700, கல்லக்குடியில் 9,656, காட்டுப்புத்தூரில் 9,332, கூத்தைப்பாரில் 11,465, மண்ணச்சநல்லூரில் 23,404, மேட்டுப்பாளையத்தில் 6,724, பொன்னம்பட்டியில் 10,552, புள்ளம்பாடியில் 8,510, பூவாளூரில் 7,097, சிறுகமணியில் 9,211, எம்.கண்ணனூரில் 11,242, தாத்தையங்கார்பேட்டையில் 11,202, தொட்டியத்தில் 12,917, உப்பிலியபுரத்தில் 6,462 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி, 4,89,847 ஆண்கள், 5,21,319 பெண்கள் என மாவட்டத்தில் மொத்தம் 10,11,323 வாக்காளர்கள் உள்ளனர்.
நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட லால்குடி, முசிறி ஆகியவற்றின் வாக்காளர் பட்டியல் விவரம் வெளியிடப்படவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில்...
புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகளில் 1,60,307 வாக்காளர்கள் உள்ளனர். ஆலங்குடி, கறம்பக்குடி, பொன்னமராவதி, கீரமங்கலம், அரிமளம், கீரனூர், அன்னவாசல், இலுப்பூர் ஆகிய 8 பேரூராட்சிகளில் 77,568 வாக்காளர்கள் உள்ளனர். இதன் மூலம் 1,15,277 ஆண்கள், 1,22,576 பெண்கள், 20 இதரர் என மொத்தம் 2,37,873 வாக்காளர்கள் உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில்...
அரியலூர் நகராட்சியில் 24,206, ஜெயங்கொண்டம் நகராட்சியில் 27,532, உடையார்பாளையம் பேரூராட்சியில் 9,882, வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் 7,075 என மொத்தம் 68,695 வாக்காளர்கள் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூர் நகராட்சியில் 42,911, பேரூராட்சிகளில் அரும்பாவூரில் 10,840, குரும்பலூரில் 10,921, லெப்பைக்குடிக்காடில் 10,271, பூலாம்பாடியில் 8,766 என மொத்தம் 83,709 வாக்காளர்கள் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில்...
கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் மொத்தம் 1,86,120 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல, குளித்தலை நகராட்சியில் 22,512, பேரூராட்சிகளில் அரவக்குறிச்சியில் 11,093, புலியூரில் 9,547, உப்பிடமங்கலத்தில் 9,042, கிருஷ்ணராயபுரத்தில் 8,791, பழையஜெயங்கொண்ட சோழபுரத்தில் 6,027, மருதூரில் 9,114, நங்கவரத்தில் 14,172, புஞ்சை தோட்டக்குறிச்சியில் 8,201 என மாவட்டத்தில் 2,84,619 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளபட்டி, புஞ்சைபுகழூர் ஆகியவற்றின் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை.
தஞ்சாவூர் மாவட்டத்தில்...
தஞ்சாவூர் மாநகராட்சியில் 1,99,506 பேர், பட்டுக்கோட்டை நகராட்சியில் 62,477 பேர் மற்றும் 20 பேரூராட்சிகளில் 2,15,885 பேர் என மொத்தம் 4,77,868 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில்...
திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சி வாரியாக கூத்தாநல்லூரில் 23,388, மன்னார்குடியில் 62,988, திருத்துறைப்பூண்டியில் 17,516, திருவாரூரில் 50,245 மற்றும் பேரூராட்சி வாரியாக குடவாசலில் 11,882, கொரடாச்சேரியில் 5,835, முத்துப்பேட்டையில் 18,662, நன்னிலத்தில் 9,597, நீடாமங்கலத்தில் 7,849, பேரளத்தில் 5,048, வலங்கைமானில் 9,491 என மொத்தம் 2,22,501 வாக்காளர்கள் உள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago