தி.மலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு - 14 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 3,76,386 வாக்காளர்கள் : ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்

By செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டத்தில் 14 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று தனித்தனியே வெளியிடப் பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 3,76,386 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று தனித்தனியே வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 14 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோர் தங்களுக்கு எல்லைக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலை தனித்தனியே வெளியிட்டனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர்.

தி.மலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் உள்ள 123 வார்டுகளில் 1,21,117 ஆண்கள், 1,32,344 பெண்கள், 20 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,53,481 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல், 10 பேரூராட்சிகளில் உள்ள 150 வார்டுகளில் 58,827 ஆண்கள், 64,073 பெண்கள், 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,22,905 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 14 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் 273 வார்டுகளில் 1,79,944 ஆண்கள், 1,96,417 பெண்கள், 25 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3,76,386 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் நகராட்சிகள் விவரம்

வரிசை எண்உள்ளாட்சி அமைப்புமொத்த வார்டுஆண்பெண்3-ம் பாலினம்மொத்தம்1திருவண்ணாமலை3967,32173,363121,40,6962வந்தவாசி2412,75113,802126,5543ஆரணி3325,75128313754,7014திருவத்திபுரம் (செய்யாறு)2415,29416,866-32,160

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்