கரோனாவை எதிர்கொண்டதைப்போல எந்தவொரு இக்கட்டான காலத்தையும் இந்தியா எதிர்கொள்ளும் : கேரள மாநில பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

By செய்திப்பிரிவு

என கேரள மாநில பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து திருப்பூரில் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த காலத்தில் ஆக்கிரமிப்பாளர்களால் சிதைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில்,15 லட்சம் சதுரடியில் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளது. தேசத்தின் தன்மான உணர்வை உயர்த்தி பிடிப்பவராக பிரதமர் மோடி உள்ளார்.

இவரது தலைமையில் நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், இறை நம்பிக்கை, இறை வழிபாடும் உன்னத நிலையை அடைந்திருக்கிறது. முதன்முறையாக உலகம் முழுவதும் உள்ள தலைவர்களால் விரும்பப்படும் தேசமாக இந்தியா உள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா என்ற இரு பெரும் வல்லரசு நாடுகளுடன் இணக்கமாக இருக்கும் புதிய உலக சக்தியாக இந்தியாவை பிரதமர் மாற்றி உள்ளார். அண்டை நாடுகளை அச்சுறுத்தி வரும் சீனாவின் ஆணவப்போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடியின் சந்திப்பு நிகழ்ச்சி அமைந்துள்ளது‌.

தமிழர்களின் கலாச்சாரத்தை திமுக ஒருபோதும் உயர்த்திப் பிடிக்க போவதில்லை என்பதை இவர்களின் ஒவ்வொரு முடிவும் எடுத்துக்காட்டுகிறது. ஒமைக்ரான் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. மோடி தலைமையில் எப்படி கரோனாவை தேசம் எதிர்கொண்டதோ, அதேபோல எந்த இக்கட்டான நிலை வந்தாலும் இந்தியா எதிர்கொள்ளும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்