திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்விக் கடன்பெற விண்ணப்பிக்க ஏதுவாககல்விக்கடன் சிறப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாராந்திர மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.
இதில் ஆட்சியர் சு.வினீத் பேசும்போது, ‘‘கல்விக்கடன் பெறும் மாணவர்கள், இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். கல்லூரி மற்றும் பாடத்திட்டம் அனைத்திலும் மாணவர்கள்நல்ல தெளிவுடன் இருந்து, எதிர்காலத்தை வளமாக அமைத்துக்கொள்ள வேண்டும். சில வித்தியாசமான பாடங்களை தேர்ந்தெடுக்கும்போது, அந்த பாடங்களை பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளதா எனவும் ஆராய வேண்டும். கல்லூரிக் காலம் என்பது, வாழ்வின் ஒரு முக்கிய காலகட்டம். அதனை எந்தளவுக்கு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறோமோ அந்தளவு எதிர்காலம் சிறக்கும்,’’ என்றார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் த.அலெக்சாண்டர் பேசும்போது, ‘‘ரூ. 7.50 லட்சம் வரை அடமானம் இன்றி அனைத்து வங்கிகளிலும் கல்விக்கடன் பெறலாம். வாங்கிய கடனை 15 ஆண்டுகள் வரை செலுத்திக்கொள்ளலாம்.’’ என்றார். இம்முகாமில், கல்விக்கடன் கேட்டு 300 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago