பனமரத்துப்பட்டியில் 8.5 பவுன்நகை திருடிய 4 பேர் கைது :

By செய்திப்பிரிவு

சேலத்தில் மூதாட்டி வீட்டில் தங்கி 8.5 பவுன் நகையை பறித்துச் சென்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால்நத்தம் கோணமடுவு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி மலையம்மாள் (60). இவர் சேலம் கடைவீதியில் துளசி விற்பனை செய்து வருகிறார். கடந்த அக்டோபர் 14-ம் தேதி சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்கு காத்திருந்தபோது, அவரிடம் உருக்கமாக பேச்சு கொடுத்த இரு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் அன்று இரவு மலையம்மாளின் வீட்டில் தங்கினர். இரவு 4 பேரும் மலையம்மாள் வீட்டில் பீரோவில் இருந்த 8.5 பவுன் நகையை திருடி விட்டு தப்பினர்.

இதுதொடர்பாக பனமரத்துப் பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காட்பாடியைச் சேர்ந்த ஜோசப், லலிதா, ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த வரலட்சுமி, அருண்பாண்டியன் ஆகியோர் நகையை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, 4 பேரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து நகையை மீட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்