விழுப்புரம் மாவட்டம் கண் டாச்சிபுரத்தை அடுத்த கலிதீர்த் தான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி சரோஜா(80), அவருடை மகள் பூங்காவனம்(60) ஆகிய இருவரும் பலத்தக் காயங்களுடன் உயிரிழந்தது நேற்று தெரியவந்தது. மேலும் 100 மீட்டர் தொலைவில் செங்கல் சூளையில் வேலை செய்த நாகலிங்கம்-அஞ்சம்மாள் தம்பதியினர் படுகாயங்களுடன் கிடந்தனர். இதுகுறித்து டிஎஸ்பி பாண்டியன் தலைமையில் 6 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
எஸ்ஐ பிரபு தலைமையிலான குழுவினர், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஒட்டநந்தல் கிராமத்தைச் சேர்ந்த கவிதாஸூக்கு(30) இக்கொலையில் தொடர் பிருப்பதை அறிந்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர் கொலை செய்ததையும், நகைகளை திருடியதையும் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து விழுப்புரம் எஸ்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், "கைது செய்யப்பட்ட கவிதாஸ் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை கொடூரமாக தாக்கி கொலை செய்து நகைகளை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டவர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வீட்டில் தனியாக இருந்த இரு வயதான பெண்களை தாக்கி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு, நகைகளை பறித்துச் சென்றார். இவர் மீது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர், சேலம் மாவட்டம் உள்ளிட்ட பல இடங்களில் கொலை, பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன. இவரை கண்டமங்கலம் சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்ததை விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் பாராட்டியுள்ளார்" என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago