மதுரை யா.ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் சரவணன் லஞ்சம் தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு போர்டு வைத்துள்ளார்.
அதில், ‘நான், யாரிடமும் லஞ்சம் பெறுவதில்லை. என் பெயரை சொல்லிக் கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமூகமாக முடித்துத் தருவதாக கூறி, யாரிடமும் எந்தவித பொருளோ, பணமோ கொடுக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆய்வாளர் சரவணன் தற் போது மதுரையில் வசிக்கிறார். ஏற்கெனவே ஐஜியாக இருந்த பாலகிருஷ்ணனிடம் பணிபுரிந்துள்ளார். டெல்லியில் சைபர் கிரைம், குற்றப்பிரிவுகளில் பணியாற்றி உள்ளார்.
இது குறித்து ஆய்வாளர் சரவணன் கூறிய தாவது: பொதுமக்களின் புகார்களை விசாரிக்கும் போது காவல்நிலையம் வரும் சிலர் உதவுவது போன்று இடைத்தரகர்களாகச் செயல்படுகின்றனர். காவல் நிலையம், காவல் அதிகாரிகளின் பெயரைச் சொல்லி புகார்தாரர், எதிர் மனுதாரர்களிடம் பணம் பெறுகின்றனர்.
நான் சரியாக இருக்கும்போது, எனது பெயரைச் சொல்லி பணம் வாங்குவது தவறு என உணர்ந்தேன். புகார்தாரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்தான் இந்த போர்டு வைத்துள்ளேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago