கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 69 துணை சுகாதாரநிலையம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் தற்காலிகமாக பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 69 துணை சுகாதார நிலையம் - நல்வாழ்வு மையங்களில் தற்காலிகமாக பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) மாதம் ரூ.11 ஆயிரம் என்ற தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி (உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடம்), 10-ம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
எனவே, பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் வரும் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில், ராமபுரம் அஞ்சல், கிருஷ்ணகிரி என்கிற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago