2017, 2018-ம் ஆண்டில் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் - 3 மாதங்களுக்குள் மதிப்பெண் சான்றிதழ் பெற வேண்டும் : அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர் தர்மராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2017 மற்றும் 2018 மார்ச், ஜூன்,செப்டம்பரில் மேல்நிலை 2-ம்ஆண்டு தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.

தேர்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளாத தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிய தனித்தேர்வர்களின் அசல் பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் இடைநிலைப்பள்ளி விடுப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை மீண்டும் தூத்துக்குடி அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு வந்துள்ளன.

அரசு தேர்வுத்துறை விதிமுறைப்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 2 ஆண்டுகள் மட்டுமேஅந்த தேர்வின் மதிப்பெண் சான்றிதழ்கள் இந்த அலுவலகத்தால் பராமரிக்கப்படும். மேலும் தனித்தேர்வர்களால் பெற்றுக் கொள்ளப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்கப்படும்.

எனவே, மேற்கண்ட 6 பருவங்களுக்கான மேல்நிலை தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத தனித்தேர்வர்கள் இன்னும் 3 மாதங்களுக்குள் அலுவலகப் பணி நாட்களில் தேர்வுக்கூட நுழைவு சீட்டுடன் நேரில் அணுகியோ அல்லது ரூ.45 மதிப்புள்ளதபால் வில்லை ஒட்டிய சுயமுகவரி எழுதப்பட்ட உறை மற்றும் தேர்வரின் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதத்துடன் தேர்வுக்கூட நுழைவு சீட்டை இணைத்து இந்த அலுவலகத்துக்கு அனுப்பியோ பெற்றுக் கொள்ள வேண்டும்.

தவறும் பட்சத்தில் மேற்கண்ட 6 பருவஙகளுக்குரிய மேல்நிலை தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை அழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்