வேலூர் புதிய பேருந்து நிலையம் - அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் : மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் புதிய பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையம் ரூ.45 கோடி செலவில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு முதல் தளத்தில் வணிக வளாகங்கள், ஆண், பெண் கழிப்பறை வசதி, சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர், தானியங்கி வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, பயணிகள் ஓய்வறை, வாக னங்கள் நிறுத்துமிடம் (பார்க்கிங்) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. பயணிகள் தங்குமிடம், வணிக வளாகங்கள், கழிவறை கட்டி டங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு தற்போது சுண்ணாம்பு அடிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்க தேவையான வசதிகள் இங்கு செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, மின் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்பு ஆகிய பணிகள் மட்டுமே நடைபெற உள்ளன.

புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப் படை வசதிகளும் இங்கு செய்யப் பட்டுள்ளன. அதேநேரத்தில், நவீன வசதிகளுடன் தரமான பேருந்து நிலையமாகவும் வேலூர் புதிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப் பணிகள் அனைத்தும் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கிறோம். அதற்கான பணிகள் வேகப்படுத்தப் பட்டுள்ளன.

கட்டுமானப் பணிகள் முழுமை யாக நிறைவடைந்ததும் புதிய பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE