கால்நடை வளர்ப்போருக்கு, கால்நடை கிசான் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்போருக்கு வங்கிகள் மூலம் புதிய கால்நடை கிசான் கடன் அட்டை வழங்கப்படுகிறது.
இதன்மூலம் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கப்பட உள்ளது. வாரந்தோறும் வெள்ளிக் கிழமை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் முகாம் நடத்தி கடன் அட்டை வழங்கப்படுகிறது.
ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் 2 புகைப்படம் ஆகியவற்றை இணைத்து வெள்ளிக் கிழமை தோறும் நடைபெறும் சிறப்பு முகாமில் வழங்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் கடன் வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago