பழங்குடியினரிடம் வனத்துறையினர் அத்துமீறுவதாக கூறி ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை வட்டத்தில் உள்ளது சின்னவயலாம்படி கிராமம். இங்கு வசிக்கும் பழங்குடியினர் மீது வனத்துறையினர் பொய் வழக்குப் போடுவது, பழங்குடி சமூக பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுப்பது மற்றும் பழங்குடி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடுவது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

இதைக் கண்டித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பாக நேற்று கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ரா.கஜேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் சி.கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், மாவட்ட செயலாளர் கே.எஸ்.அப்பாவு, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ரா.சின்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்