கல்வராயன்மலையில் - 9 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு :

By செய்திப்பிரிவு

கல்வராயன்மலையில் மது விலக்கு ஏடிஜிபி மகேஷ்குமார் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் 8,900 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டது.

கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை அழித்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக மதுவிலக்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், மதுவிலக்கு ஐஜி கபில்குமார் சரத்கார், விழுப்புரம் டிஐஜி பாண்டியன், கள்ளக்குறிச்சி எஸ்பி ஜியாவுல்ஹக், சேலம் எஸ்பி அபிநவ், மதுவிலக்கு எஸ்பிக்கள் பி.பெருமாள், சாந்தி பங்கேற்றனர்.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து, தலா 5 டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், 70 காவலர்கள், 30 ஆயுதப்படை காவலர்கள் என 100 பேருடன் 10 சிறப்புப் படைகள் அமைத்து நேற்று கல்வராயன்மலையில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 270 லிட்டர் கள்ளச்சாராயம், 8,900 கள்ளச்சாராய ஊறலை கண்டு பிடித்து, அவற்றை அங்கேயே அழித்தனர்.

இதுபற்றி தமிழக மதுவிலக்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் கூறுகையில், “கள்ளச்சாராயம் தொடர்பான தகவல் கிடைத்தால் 10581 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்