முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமலெட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது கணவர் மாற்றுத் திறனாளி. எங்களுக்கு நான்கு மகன்கள். மூத்த மகன் மணி கண்டன்(21). இவர் கல்லூரியில் படித்து வந்தார். இவர் டிச.4-ல் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் உரம் வாங்கச் சென்றார்.
கீழத்தூவல் காளி கோவில் அருகே போலீஸார் லட்சுமணன், பிரேம்குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறினர். மணிகண்டன் நிறுத்தாததால் அவரை போலீஸார் காவல் நிலை யம் அழைத்துச் சென்றனர். அங்கு மணிகண்டனை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர் என்னை போனில் அழைத்து மணிகண்டனை அழைத்துச் செல்லுமாறு கூறினர். மணிகண்டனை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது உடல் முழுவதும் வலிப்பதாகவும், போலீஸார் கடுமையாகத் தாக்கி யதாகவும் கூறினார்.
அதிகாலை 1.30 மணியளவில் மணிகண்டன் உயிரிழந்தார். போலீ ஸார் தாக்கியதில் என் மகன் உயிரிழந்துள்ளார். என் மகனின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
மணிகண்டனின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். ராம நாதபுரம் அரசு மருத்துவமனை யில் இருந்து இடுகாட்டுக்கு உடல் கொண்டு செல்லும் வரை போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago