கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கரிடம் மாணவியின் தாய் மனு அளித்தார்.
கரூர் வெண்ணெய்மலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த ஒரு மாணவி, ‘பாலியல் தொல்லையால் உயிரை விடும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும்’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு நவ.19-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதுதொடர்பாக வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவர் அமைப்புகள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டங்களை நடத்தின. ஆனால், விசாரணை முறையாக நடைபெறுவதால் மாணவர்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என மாணவியின் தாய் கோரிக்கை விடுத்தார்.
அதன்பின், அந்த மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன், மாணவியின் தற்கொலைக்கு தான் காரணமல்ல என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தனது மகள் தற்கொலை வழக்கில் இதுவரை முன்னேற்றம் இல்லாததால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் என மாணவியின் தாய், ஆட்சியரிடம் மனு அளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago