திருச்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்புப் பார்வையாளர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவையின் 9 தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியில் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து தேர்தல் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு, வாக்காளர் பட்டியல் சிறப்புப் பார்வையாளரும், சிறு- குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு அரசு செயலருமான ப.மகேஸ்வரி தலைமை வகித்தார்.

அப்போது, மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்தும், களப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்த சிறப்புப் பார்வையாளர் ப.மகேஸ்வரி, அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனி குமார், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், தேர்தல் தனி வட்டாட்சியர் க.முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்