புதுக்கோட்டையில் சார்பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் திறப்பு :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் ரூ.93.26 லட்சம் மதிப்பில் 3,230 சதுர அடி பரப்பளவில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் வசதியுடன் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலக கட்டிடத்தில் பொதுமக்கள் காத்திருப்பு அறை, சார்பதிவாளர் அறை, கணினி அறை, பதிவு வைப்பு அறை, மதிய உணவு அறை, இ சான்றிதழ் அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள அமைப்புகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கட்டிடத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் புதுக்கோட்டையில் உள்ளபுதிய கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி, அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். நிகழ்ச்சியில் திருநெல்வேலி பதிவு மன்ற துணைத் தலைவர் யு.எஸ்.ஆறுமுகம்,தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் எம்.பால்பாண்டி,தணிக்கை மாவட்ட பதிவாளர் நூர்ஜஹான், நிர்வாகசார் பதிவாளர் குருசாமி, வழிகாட்டு சார்பதிவாளர்மகாராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்