தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் மாடித்தோட்ட விதைகள் வழங்கும் திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
வேளாண்மை - உழவர் நலத்துறையின் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ. 225 மானியவிலையில் 6 வகையான காய்கறிசெடிகளை வீட்டு மாடித் தோட்டங்களில் வளர்த்து பயன்பெறும் விதமாக மாடித் தோட்டத் தளைகளையும், ஊரகப் பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்க ரூ.15-க்கு 12 வகை காய்கறி விதைத்தளைகளையும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ்ரூ. 25-க்கு 8 செடிகள் அடங்கிய தொகுப்பையும் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 75 சதவீத மானியவிலையில் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அவர் கூறும்போது தூத்துக்குடி மாவட்டத்தில் 4,550 பயனாளிகளுக்கு 75 சதவீத மானிய விலையில் மாடித் தோட்டத் தளைகள், காய்கறி விதைத் தளைகள் மற்றும் ஊட்டச்சத்து தளைகள் ரூ.11 லட்சம் மதிப்பில் வழங்கப்படவுள்ளன.
இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு பொதுமக்கள் https://tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளம் மூலமாக பதிவுசெய்யலாம் என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago