கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இருமடங்காக உயர்வு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறும்போது, சமீபத்தில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்தாண்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக இருந்த நிலையில் தற்போது, 102 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமலும், கொசுப்புழுக்கள் உண்டாகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் வீட்டின் பிரிட்ஜ் பின்புறம் தண்ணீர் தேங்கியுள்ளதா எனவும் பார்த்து சுத்தப்படுத்திக் கொள்வதன் மூலம் டெங்கு பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்