திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எல்லை பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல், நேற்று காலை 6 மணி வரை என, 12 மணி நேர், குற்றவாளிகள் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் அறிவுறுத்தலின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களான ஜெசுராஜ், மீனாட்சி ஆகியோர் மேற்பார்வையில் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நடைபெற்ற குற்றவாளிகள் தேடுதல் வேட்டையில், 300 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தொடர்பாக சோதனைமேற்கொள்ளப்பட்டது.
அதில், கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 20ரவுடிகளும், பிடியாணை நிலுவையில் இருந்த 21 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அதுமட்டுமல்லாமல், கூடுதல் விலைக்கு விற்பதற்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 60 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர்.
இப்படி கைது செய்யப்பட்ட 166 பேரில், மீஞ்சூர் பகுதியில் பதுங்கியிருந்த ரவுடி விக்னேஷிடம் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, மற்றவர்களிடம் இருந்து 16 கத்திகள், 337 மதுபாட்டில்கள், 400கிராம் கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள், 37 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago