கோட்டக்குப்பம் அருகே தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோட்டக்குப்பம் அருகே உள்ள நடுகுப்பம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக மீனவ குடியிருப்புக்குள் கடல் நீர் புகுந்ததால் 2 விசை படகு மற்றும் வீடுகள் சேதமடைந்தன. இதனால் அச்சமடைந்துள்ள மீனவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை விடுத்தனர்.
இத்தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸார் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து எஸ்ஐ பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸார் 50 பெண்கள் உட்பட 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago