கிருஷ்ணகிரியில் அதிமுக உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வரும் 13, 14 ஆகிய நாட்களில் நடக்க உள்ள உட்கட்சி தோ்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை வகித்தார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அசோக்குமார் சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், நடந்து முடிந்த தலைமைக் கழக அமைப்பு தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை ஒருமனதாக தேர்வு செய்த அனைத்து அடிப்படை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது. உட்கட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்தி கொடுக்க அனைத்து நிர்வாகிகளையும் கேட்டுக் கொள்வது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை வன்மையாக கண்டிப்பது.வரும் பொங்கல் திருநாளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். கடந்த மாதம் பெய்த மழையில் வெள்ளத்தில் மிதக்கும் தமிழக மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், வேப்பனப்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்