வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடந்த ‘ஆபரேஷன் ஸ்டிராமிங்’ சோதனையில் - தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாக 27 பேர் கைது :

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் ஸ்டிராமிங்’ சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாக 27 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் குற்றச்செயல்கள், சட்டவிரோத நடவடிக் கைகளை தடுக்கவும் ‘ஆபரேஷன் ஸ்டிராமிங்’ சோதனை நடைபெற்றது.

வேலூர் சரக டிஐஜி உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்), டாக்டர் தீபாசத்யன் (ராணிப்பேட்டை) ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை விடிய, விடிய சோதனை நடைபெற்றது.

இதில், வேலூர் மாவட்டத்தில் 40 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கையும், 150 தங்கும் விடுதிகளில் திடீர் சோதனையும் நடைபெற்றது. காவல் நிலைய சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ளவர்களில் 51 பேரை பிடித்து விசாரணைக்கு உட்படுத்தப் பட்டனர். மேலும், அவர்களிடம் எந்தவித குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டோம் என்றும் எழுதி வாங்கிக்கொண்டனர். கஞ்சா வழக்கில் 10 பேர், குட்கா பாக்கெட்டுகள் விற்றதாக 8 பேரும், சாராயம் விற்றதாக 30 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சரித்திர பதிவேட்டில் இடம் பெற்றுள்ள ரவுடிகள் 29 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. 40 தங்கும் விடுதிகளில் திடீர் சோதனையும், சாராய வழக்குகளில் தொடர்புடைய 35 பேரும், தடை செய் யப்பட்ட குட்கா பாக் கெட்டுகள் விற்றதாக 19 பேரும் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் மாவட் டத்தில் ‘ஆபரேஷன் ஸ்டிராமிங்’ சோத னைகளை கடந்து கோட்டை சுற்றுச்சாலையில் உள்ளகாவலர் வீட்டுவசதி வாரிய அலுவலகத் தில் திருட்டு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

வேலூர் சரக டிஐஜி உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்), டாக்டர் தீபாசத்யன் (ராணிப்பேட்டை) ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை விடிய, விடிய சோதனை நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE