திருப்பூரில் கஞ்சா விற்கப்படுவதாக புகார் - சாலையோரம் வசிக்கும் பெண்களிடம் சோதனை :

தொழில் நகரமான திருப்பூரில் தங்கி, பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள், பின்னலாடை நிறுவனங்களுக்கு நாள்தோறும் வெளியூரில் இருந்து வேலைக்கு வந்து செல்லும் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரயில் நிலையம் மற்றும் அதனை சார்ந்த வளாகங்கள், ஊத்துக்குளி சாலை, ராயபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக போலீஸார்விசாரித்ததில், சாலையோரங்களில் தங்கி வசிக்கும் பெண்கள், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தெரியவந்தது. இதையடுத்து சாலையோரங்களில் வசிக்கும் பெண்களிடம் நேற்று மகளிர் போலீஸார் சோதனை நடத்தினர். கஞ்சா எதுவும் பிடிபடவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகர போலீ ஸார் கூறும்போது, ‘‘மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் அளித்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை அடிக்கடி நடைபெறும்,’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE