காவேரிப்பட்டணம் அருகே - அரசு அலுவலரிடம் வழிப்பறி இரு இளைஞர்கள் கைது :

By செய்திப்பிரிவு

காவேரிப்பட்டணம் அருகே வேளாண்மைத்துறை அலு வலரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி வட்டம் பையூர் அடுத்த கீழ்பையூரைச் சேர்ந்தவர் நேரு (36). இவர் கிருஷ்ணகிரி வேளாண் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3-ம் தேதி இருசக்கர வாகனத்தில் காவேரிப்பட்டணம் அருகே இடைபையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த 2 பேர் நேரு சென்ற வாகனத்தை வழிமறித்தனர். மேலும், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.

புகாரின் பேரில் காவேரிப் பட்டணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது காவேரிப்பட்டணம் அடுத்த எர்ரஹள் ளியைச் சேர்ந்த செந்தில் (38), சந்தைபாளையம் தர் (24) எனத் தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்