ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் அங்குள்ள குடியிருப்பு வாசிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இரவோடு இரவாக போலீஸ் பாதுகாப்புடன் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஆரோவில் பன்னாட்டு நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அங்கு கிரவுன் எனப்படும் திட்டத்திற்காக சாலை அமைப்பதற்காக பன்னாட்டு நகர வளர்ச்சிக்குழு அங்குள்ள மரங்களை வெட்டும் பணியை மேற்கொண்டிருக்கிறது. இதற்காக
ஆரோவில் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள 30 மரங்கள் நேற்று முன்தினம் வெட்டப்பட்டன. இதனை எதிர்ப்பு குடியிருப்பு வாசிகள், போராட்டத்தில் ஈடுபட் டதால் மரங்களை வெட்டும் பணி கைவிடப்படுவதாக நகர வளர்ச்சிக் குழு அறிவித்தது.
ஆனால் நேற்று அதிகாலை 2 மணி மீண்டும் மரங்களை வெட்டும் பணியை தொடங்கியது. இதையறிந்த குடியிருப்பு வாசிகள் அப்பகுதிக்குச் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். கிரவுன் திட்டத்திற்காக மாற்றுப் பாதை அமைக்க வேண்டும். இதற்காக மரத்தை வெட்டக் கூடாது எனவும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் போலீஸார் அவர்களை தடுத்து வாகனத்தில் ஏற்றியுள்ளனர். மரங்கள் வெட்டி முடித்த நிலையில் அவர்கள் நேற்று அதிகாலையில் விடுவிக் கப்பட்டனர்.
கிரவுன் திட்டத்திற்காக மாற்றுப் பாதை அமைக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago