மானாமதுரை அருகே - வெள்ளம் அடித்து சென்ற 500 ஏக்கர் நெற்பயிர் : செந்தில்நாதன் எம்எல்ஏ பார்வையிட்டார்

By செய்திப்பிரிவு

மானாமதுரை அருகே 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றது. அப்பகுதியை சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் பார்வையிட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிக தண்ணீர் வருவதால் கரையின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கள்ளர்குளம், காளிப்பட்டி, வேலூர், முருகபாஞ்சான், கள்ளர்வலசை, செய்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த 500 ஏக்கர் நெற்பயிர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. உப்பாற்றையொட்டி உள்ள வேலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகம் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகத் தெரி வித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்