கிருஷ்ணகிரி ராயப்பன் தெருவில் உள்ள பேட்ராயசுவாமி மஹாலில் 10-ம் ஆண்டு சீதா கல்யாண உற்ஸவம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி, காலை 7 மணிக்கு சீதா ராமர் படப்பிரதிஷ் டையும், காலை 9 மணி முதல் நாம சங்கீர்த்தனமும், ஓசூர் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் குழுவினரின் பாண்டுரங்க பஜனையும் நடைபெற்றது.
விழாக்குழு ஒருங்கிணைப் பாளர் லட்சுமி நாராயணன் மற்றும் ஆரியபவன் நடராஜன் ஆகியோர் சார்பில் பகல் 12 மணி அளவில் சீதா கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி சீதா கல்யாண விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago