நெல்லையில் இந்திர விழா :

திருநெல்வேலி சந்திப்பு சாரதா எஸ்டேட் அடுக்குமாடி குடியிருப்பில் இந்திர விழா நடைபெற்றது. தீபாவளி அமாவாசை நாளில் தாமிரபரணி நதிக்கரையில் இருந்து மண் எடுத்து வந்து, அதன் மூலம் பசு, கன்று சிலைகளை வடிவமைத்து, அவற்றை விநாயகர் கோயிலில் வைத்து 21 நாட்கள் பூஜை செய்யப்பட்டது. முளைப்பாரியிட்டு தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை இந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சிறுமிகள், பெண்கள் பாடல்கள் பாடி, கோலாட்டத்துடன் விழாவை கொண்டாடினர். நிறைவு நாளான நேற்று பசு, கன்று சிலைகள், முளைப்பாரி வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோலாட்டத்துடன் ஊர்வலமாகச் சென்று சிலைகளை தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE