தஞ்சாவூர் பெரிய கோயிலில் - மழைநீர் கசிவதை சீரமைக்க வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு பொருளாளர் பழ.ராசேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

தஞ்சாவூர் பெரிய கோயிலின் பெருவுடையார் சன்னதிக்கு முன்பாக உள்ள அர்த்தமண்டபத்தில் சமீபத்தில் பெய்த மழையால் கசிவு ஏற்பட்டு, மழைநீர் ஒழுகுகிறது.

இதுகுறித்து பெரிய கோயில் நிர்வாகத்திடமும், இந்திய தொல்லியல் துறையினரிடமும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, கோயிலில் மழைநீர் கசிவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோயில் வளாகத்தில் உள்ள இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் நேரடியாக சென்றும் வலியுறுத்தி உள்ளோம்.

தற்போது, மழை நின்றுள்ள நிலையில், மீண்டும் மழை வருவதற்கான அறிவிப்புகள் வருகின்றன.

எனவே, அடுத்த மழை வருவதற்குள் இந்த மழைநீர் கசிவை போர்க்கால அடிப்படையில் தொல்லியல் துறையினர் சீரமைப்பதுடன், பிற இடங்களிலும் மழைநீர் கசிகிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்