தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு - 95 சதவீதம் கரோனா தடுப்பூசி: ஆட்சியர் தகவல் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி தருவை மைதான உள்விளையாட்டு அரங்கத் தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்து, 204 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.06 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசுகளும், சிறப்பாக பணியாற்றிய மாற்றுத்திற னாளி அலுவலகத்தை சேர்ந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்று, நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவில் ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 95 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

மாற்றுத்திறனா ளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல, மாற்றுத்திறனாளிகளின் அனைத்து சங்கங்களும் உறுதுணையாக உள்ளன. இதனால் கோரிக்கைகளை நிறை வேற்றுவது எளிமையாக உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகளால் அமைக்கப்பட்ட அரங்கில் கைவினைப்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்