‘மக்களைத் தேடி மக்களின் அரசு' திட்டத்தின் கீழ் - நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 15,685 மனுக்கள் :

By செய்திப்பிரிவு

‘மக்களைத் தேடி மக்களின் அரசு’ திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம் மூலமாக பொதுமக்களிடமிருந்து ஒரே நாளில் 15 ஆயிரத்து 685 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மக்களின் அரசு’ திட்டத்தின் கீழ், 4 நகராட்சிகள் 11 பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் சிறப்பு முகாம், 41 இடங்களில் நடத்தப்பட்டது.

இதில் பட்டா மாறுதல், குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, சாதி சான்றிதழ், மருத்துவக் காப்பீட்டு அட்டை, சிறுதொழில் கடனுதவி, தையல் இயந்திரம் மற்றும் குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மனுக்கள் பெறப்பட்டன.

உதகை வட்டம் - 2,774, குந்தா வட்டம் - 577, குன்னூர் வட்டம் - 4,569, கோத்தகிரி வட்டம் - 1,216, கூடலூர் வட்டம் - 4,067, பந்தலூர் வட்டம் - 2,482 என மொத்தம் 15 ஆயிரத்து 685 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 3 முதல் 5 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, வனத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெறும் விழாவில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்