நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நிறுவனரான ஆரிகவுடரின் 128-வது பிறந்தநாள் விழா, உதகையில் நேற்று கொண்டாடப்பட்டது.
ஆரிகவுடர் நினைவு விழாக் குழு தலைவர் மஞ்சை வி.மோகன் தலைமை வகித்தார். என்.சி.எம்.எஸ். மேலாண்மை இயக்குநர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து, நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்திலுள்ள ஆரிகவுடர் சிலைக்கு, உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.கணேஷ் மற்றும் விழாக்குழுவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் மஞ்சை வி.மோகன் கூறும்போது, "நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தை ஹெச்.பி.ஆரிகவுடர் நிறுவினார். உதகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைபெற்றுத் தந்தவர். இத்தகைய மக்கள் பணிக்கு அங்கீகாரமாக, சென்னை மேற்கு மாம்பல ரயில் நிலையத்தின் முன்புள்ள சாலைக்கு ஆரிகவுடர் சாலை எனவும், கூடலூர் - கர்நாடக எல்லையான தெப்பக்காடு நுழைவுவாயிலில் ஆரிகவுடர் பெயரில் நுழைவு வளைவை அமைத்தும் தமிழக அரசால் கவுரவிக்கப்பட்டவர்.
ஆரிகவுடரின் சேவை குறித்துஎதிர்கால சந்ததியினர் அறியும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் அவருக்கு மணிமண்டபம் கட்டி அரசு விழாவாக கொண்டாடுவதுடன், நினைவு தபால் தலை வெளியிட்டு, நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு அவரின் பெயரை சூட்ட வேண்டும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago