திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் - ஏழு குழந்தைகள் உட்பட 17 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை : கொசு ஒழிப்பு பணிகளை துரிதப்படுத்த மக்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 17 பேர், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர் மாநகரில் நாளுக்குநாள் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநகராட்சி 1 மற்றும் 2-ம் மண்டலங்களில் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராபின் (27) என்பவர் திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பூர் அவிநாசி சாலை காவிலி பாளையத்தை சேர்ந்த 18 வயது ஆண், பல்லடம் தண்ணீர் பந்தலை சேர்ந்த 21 வயது பெண், அங்கேரிபாளையம் சாலை பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி, பிச்சம்பாளையம் நகரை சேர்ந்த 22 வயது ஆண், மங்கலம் கோல்டன் நகரை சேர்ந்த 7 வயது சிறுமி, செந்தூரன் கார்டனை சேர்ந்த 34 வயது ஆண், பாளையக்காட்டை சேர்ந்த 7 வயது சிறுமி, கட்டபொம்மன்நகரை சேர்ந்த 11 வயது சிறுமி, 12 வயது சிறுவன், மங்கலம் சாலை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த 5 வயது சிறுவன், 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்த 5 வயது சிறுவன் உட்பட 17 பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 சிறுவர், சிறுமிகள் உட்பட 17 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்