திருப்பூரில் கால்நடை சுகாதார முகாம்கள் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் நடத்தும் திட்டம் 2021-22-ம் நிதியாண்டில் அமல் படுத்தப்பட உள்ளது.

நோய்வாய்ப்பட்ட கால்நடை களுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல் உள்ளிட்ட சிகிச்சைகள், கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படஉள்ளன. மாவட்டத்தில் உள்ள 13 கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றியத்துக்கு தலா 20 முகாம்கள் வீதம் 260 முகாம்கள் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம்வரை ஒவ்வொரு கால்நடை மருந்தகத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கால்நடைபராமரிப்புத் துறையின் மூலம் நடத்தப்பட்ட உள்ளன. இதை கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றுகுறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்