குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க மா.கம்யூ. வலியுறுத்தல் :

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சிகாமணி நேற்றுஅளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

திருப்பூர் மாநகராட்சி 2-ம்மண்டலம் 18-வது வார்டுக்கு உட்பட்ட பூலுவபட்டி முதல் வாவிபாளையம் வரையிலான மாநில நெடுஞ்சாலையில் தோட்டத்துபாளையம் நெருப்பெரிச்சல் பகுதியில், மழைநீர்,சாக்கடை நீர் வெளியேற வழியில்லாமல் சாலையில் தேங்கியுள்ளது. சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், சமீபத்தில் பெய்த மழையால் சேறும், சகதியுமாக சாலை காட்சி யளிக்கிறது.

பலமுறை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் மனுக்கள் அளித்தோம். அவ்வப்போது சிறுசிறு பணிகளை மேற்கொள்வதும், மாநகராட்சி வாகனங்கள் மூலம் கழிவு நீரை உறிஞ்சுவதும், சாலையை தற்காலிகமாக செப்பனிடவும் மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனர்.

இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், வரும் 7-ம்தேதி நெருப்பெரிச்சல் பகுதியில்‘மரணக் குழியில் மரக்கன்று நடும் போராட்டம்’ அறிவிக்கப்பட்ட நிலையில், ஜல்லி மற்றும் எம்- சாண்ட்மணல் அடங்கிய கலவைகளை சாலை உள்ள பள்ளத்தில் கொட்டியுள்ளனர்.இதனால் மழையின்போது இச்சாலையில் செல்லும்வாகன ஓட்டிகள் வழுக்கி விழும்நிலையுள்ளது. 15-க்கும் மேற்பட்டோர் இச்சாலையில் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளனர்.

எனவே, கழிவுநீர் கால்வாயை அமைத்து, கழிவு நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள் ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்