வீடுகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர் நேற்று திடீரென ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையம் அருகே 1-வது ரயில்வே கேட் பகுதியில் உள்ள ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பில், 70 வீடுகள் உள்ளன. கடந்த வாரம் பெய்த மழை காரணமாக இக்குடியிருப்புகளை சுற்றி அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தியும், புதிய வீடுகள் கட்டித்தரக் கோரியும் ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர் நேற்று மாலையில் திடீரென மைசூரூ செல்வதற்காக கீழூர்ரயில் நிலையத்தில் தயாராக நின்ற விரைவு ரயிலைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மத்திய பாகம் போலீஸாரும், ரயில்வே போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீரை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.
மழை காரணமாக இக்குடியிருப்புகளை சுற்றி அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago