தி.மலை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அணைகள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு 5-வது மாதங்களாக நீடிக்கிறது.
அதேபோல், நீச்சல் குளங்களுக்கு செல்லவும் தடை உள்ளது. இந்த தடை உத்தரவு இன்றுடன் (5-ம் தேதி) நிறைவு பெற இருந்த நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அணைகள், பூங்காக்கள், மற்றும் நீச்சல் குளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை வரும் 19-ம் தேதி வரை நீட்டித்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago