விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருள் விற்றதாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் அருகில் போதைப்பொருள் விற்பனையை முழுமையாகத் தடுக்கும் விதமாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின்படி, மாவட்ட குற்றப் பதிவேட்டு கூட துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த 1-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு அருகே போதைப்பொருள் விற்ற 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா, புகையிலை சம்பந்தப்பட்ட 6.811 கிலோ போதைப் பொருட்கள், ரூ.11,012 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 12 தனிப்படைகளும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் இதில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட எஸ்பி எச்சரித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago