விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நெல் நாற்று நடவு விழா நடைபெற்றது.
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் வேளாண் மையை ஊக்குவிக்கும் வகையில் தினமும் மரக்கன்றுகள் நடும் பணியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட ஏற்பாடு செய்தனர்.
இதையொட்டி கல்லூரி வளாகத்தில் நெல் நாற்று நடவுவிழா நடைபெற்றது. பேராசிரியர் என்.ஜெயகுமரன் வரவேற்றார். கல்லூரி பரிபாலன சபை தலைவர் வி.பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் சர்ப்பராஜன் முதல் நெல் நாற்றை நட்டுவைத்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். கல்லூரி பொருளாளர் சக்திபாபு, முதல்வர் பா.சுந்தரபாண்டியன், சுயநிதிப் பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஏராளமான மாணவ, மாணவிகள் நாற்று நடவு செய்தனர்.
ஆராய்ச்சி கூடுதல் முதன்மையர் பி.மேகலிங்கம் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாவரவியல் துறை பேராசிரியர்கள் பி.பெரியகருப்பையா, வி.சிவா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago