மானாமதுரை அருகே குவாரி அமைத்ததில் விதிமீறல் - கண்மாய் கரை உடைந்து 2 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் :

By செய்திப்பிரிவு

மானாமதுரை அருகே விதிகளை மீறி அமைக்கப்பட்ட குவாரியின் அருகே உள்ள கண்மாய் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மானாமதுரை அருகே செய் களத்தூரில் உள்ள பெரிய கண் மாய்க்கு உப்பாற்றிலிருந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது.

செய்களத்தூர் பெரிய கண்மாய்க்கு மறுகரையில் கள்ளர் வலசை, முருகபாஞ்சான் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் கள்ளர் வலசை அருகே பெரிய கண்மாய் கரையையொட்டி மண் குவாரி பள்ளம் உள்ளது. அந்த பள்ளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி உள்ளது. அதன் அருகே உள்ள பெரிய கண்மாயின் கரை பலமில்லாமல் உள்ளதால், கண் மாயில் இருந்து தண்ணீர் கசிந்து வருகிறது. இதனால் கண்மாய் கரை உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்மாயில் உடைப்பு ஏற்பட்டால் கள்ளர்வலசை, முருகபாஞ்சான் ஆகிய கிராமங்களில் தண்ணீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முருகபாஞ்சான் விவசாயி கண்ணன் கூறியதாவது: நீர்நிலைகளுக்கு அருகே குவாரி அமைக்கத் தடை இருந்தும், கண்மாய் கரையையொட்டி குவாரி அமைத்து மண் அள்ளியுள்ளனர். தற்போது கண்மாய் உடையும் நிலையில் உள்ளதால் கரையை சற்று பலப்படுத்தியுள்ளனர். எனினும் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்