பாரதிதாசன் பல்கலை.யில் நிதி சந்தைகள் மையம் தொடக்கம் : என்எஸ்இ-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

பாரதிதாசன் பல்கலைக்கழக வணிகவியல் மற்றும் நிதிக்கல்வியியல் துறையில் நிதி சந்தைகள் மையம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதற்காக தேசிய பங்கு சந்தை கழகத்துடன் (NSE Academy), பாரதிதாசன் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண் டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பதிவாளர் க.கோபிநாத் மற்றும் தேசிய பங்கு சந்தை கழக தலைமை நிர்வாக அதிகாரி ஆபிலாஷ் மிஸ்ரா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

பல்கலைக்கழக வணிகவியல் மற்றும் நிதிக் கல்வியியல் துறைத் தலைவர் மு.செல்வம் பேசும்போது, ‘‘சந்தை தொடர்பான பாடத் திட்டங்களை உருவாக்க நிதி சந்தைகள் மையம் முனைந்து செயல்படும்’’ என்றார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.செல்வம் பேசும்போது, “தேசிய பங்கு சந்தை கழகத்தின் வளங்கள் மற்றும் அறிவுசார் வளங்கள் ஆகியவற்றின் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் நிதி சந்தையின் மாறும் சூழலை புரிந்து கொள்ள வழிவகுக்கும்” என்றார்.

தொடர்ந்து, நிதி சந்தைகள் குறித்த ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அண்ணாமலை முதலீட்டு சேவைகள் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மு.அண்ணாமலை, தேசிய பங்கு சந்தை கழக இணை மேலாளர் கோகுல்நாத் ராஜா, மேலாளர் வினோத் ஜேம்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்