‘இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் கீழ், உதகையை அடுத்த பி.மணியட்டி கிராமத்தில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் ‘இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் கீழ், 1518 கிராமங்களில் 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அண்மையில் ஆன்லைன் வழியில் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
உதகை வட்டாரத்தில் அப்புகோடு, பி.மணியட்டி, மேல்குந்தா, நுந்தளா, ஆடாசோலை, காவிலோரை, கே.கே.நகர், அணிக்கொரை, துளிதலை, இத்தலார், நஞ்சநாடு, கடநாடு உட்பட்ட 19 குடியிருப்பு பகுதிகளில் மாலை நேர வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் முன்னிலையில் வகுப்புகள் தொடங்கின.
உதகையை அடுத்த பி.மணியட்டி கிராம குடியிருப்பு பகுதியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன் தொடங்கி வைத்தார். ஊர் தலைவர், கவுன்சிலர், பெற்றோர் - ஆசிரியர் கழக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதகை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் விஜய்ராஜ், எழிலரசன், ஜமுனா மற்றும் பொறுப்பு மேற்பார்வையாளர் ஷீலா ஆகியோர் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago